பிரம்மாண்ட சாதனை படைக்கும் பிரேமம்

240

பிரம்மாண்ட சாதனை படைக்கும் பிரேமம் - Cineulagam

ஆல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி, சாய் பல்லவி, அனுபாமா, மடோனா ஆகியோர் நடித்திருந்த படம் பிரேமம். படக்குழுவினரே எதிர்ப்பார்க்காத அளவிற்கு இந்த படம் இளைஞர்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.

சென்னையில் 250 நாள் ஹவுஸ் புல்லாக ஓடிக்கொண்டிருந்த இப்படம் திடீரென்று நிறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து திருச்சியில் திரையிடப்பட்டு வந்த இப்படம் 300வது நாளை தொட்டிருக்கிறது.

திருச்சியில் படம் திரையிடப்பட்ட போது ரசிகர்கள் கொண்டாடிய ஒரு வீடியோ வலைதளங்களில் பரவி வந்தது. இந்த பிரேமம் படம் மூலம் நிவின் பாலிக்கு தமிழில் அதிக ரசிகர்கள் கூட்டம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

SHARE