பிரஸல்ஸ் வெடிகுண்டு தாக்குதலை இனிப்பு வழங்கி கொண்டாடிய ஐ.எஸ். தீவிரவாதிகள்

288
பெல்ஜியம் தலைநகரில் நிகழ்த்திய தாக்குதல் சம்பவத்தை ஐ.எஸ். தீவிரவாதிகள் இனிப்பு வழங்கி கொண்டாடியது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.பெல்ஜியம் தலைநகர் பிரஸல்ஸில் நேற்று முன்தினம் நிகழ்த்திய வெடிகுண்டு தாக்குதலில் பலர் மரணமடைந்துள்ளனர்.

இந்த தாக்குதலில் ஈடுபட்ட முக்கிய தீவிரவாதியை பொலிசார் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த தாக்குதலை கொண்டாடும் விதமாக சிரியாவில் உள்ள மக்களுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் இனிப்பு வழங்கிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

சிரியாவின் கிழக்கு பகுதியில் உள்ள டயர் எஸ்ஸோர் (Dier Ezzor) மாகாணத்தில் உள்ள சிறுவர்களுக்கும் ஆண்களுக்கும் விதவிதமான இனிப்புகள் வழங்கும் புகைப்படங்களை தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர்.

மேலும் பிரஸல்ஸ் நகரில் நடந்த தாக்குதலை ஐ.எஸ். அமைப்பு எவ்வாறு இனிப்புகளை வழங்கி கொண்டாடி வருகிறது என்பதை தெரிந்துகொள்ளுங்கள் எனவும் அந்த புகைப்படத்தில் எழுதப்பட்டுள்ளன. இந்த புகைப்படங்கள் எதிலும் பெண்கள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE