பிரான்சில் இடம்பெற்ற எமது நிலம் எமக்கு வேண்டும் எழுச்சிப் போராட்டம்!

242

எமது நிலம் எமக்கு வேண்டும் எனும் எழுச்சிப்போராட்டம் ஒன்று பிரான்சில் இன்று (02) பிற்பகல் 2.30 மணியளவில் பிரான்சு Place de la Bastille பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த போராட்டத்தை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு, தமிழீழ மக்கள் பேரவை ஆகியவற்றின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

இதன்போது மக்கள் பலரும் பதாகைகள், தமிழீழத் தேசியக்கொடி என்பவற்றைத் தாங்கியிருந்ததுடன், பிரெஞ்சுமொழி, ஆங்கிலமொழியில் போராட்டத்தின் நோக்கம் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பிரெஞ்சுமொழி, ஆங்கிலமொழியிலான துண்டப்பிரசுரங்களும் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்பட்டது. வெளிநாட்டவர்கள் பலரும் எந்த போராட்டத்தின் நோக்கம்பற்றி அறிந்துக்கொணடுள்ளனர்.

மேலும், நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலைத் தொடர்ந்து தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் நிகழ்வுடன் இந்த போராட்டம் நிறைவுகண்டுள்ளது

SHARE