பிரான்சில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மாயம்: கொலையா? தற்கொலையா?

183

பிரான்சில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் மர்மமான முறையில் மாயமான சம்பவம் விசாரணை அதிகாரிகளை விழி பிதுங்க செய்துள்ளது.

பிரான்சின் Orvault பகுதியில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை பாஸ்கல்(56), தாயார் Brigitte (49), மகன் Sébastien (21) மற்றும் மகள் Charlotte (18) ஆகிய 4 பேர் மர்மமான முறையில் திடீரென்று கடந்த மாதம் 16 ஆம் திகதி மாயமாகியுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 23 ஆம் திகதி மாயமான Brigitte என்பவரது சகோதரி ஒருவர் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு தந்தை மற்றும் மகனுக்கு இடையேயான உறவில் சிக்கல் இருந்துள்ளது தெரிய வந்தது.

கடந்த 2013 ஆம் ஆண்டில் இருந்தே தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான உறவில் விரிசல் இருந்து வந்ததை அவர்களது தகவல் பரிமாற்றங்கள் உறுதி செய்துள்ளது.

பலமுறை தந்தையை பொலிசாரிடம் சிக்க வைப்பேன் என மகன் செபஸ்டீன் கூறி வந்துள்ளதும் விசாரணை அதிகாரிகளுக்கு தெரிய வந்தது.

மட்டுமின்றி குறித்த குடிம்பம் தங்கியிருந்த வீட்டின் பல பகுதிகளில் அந்த குடும்ப உறுப்பினர்களில் 3 பேரின் ரத்தம் உறைந்த நிலையில் காணப்பட்டுள்ளது. மேலும் பெற்றோரின் வாகனங்கள் வீட்டின் முன்னர் காணப்பட்டது. ஆனால் செபஸ்டீன் என்பவரது கார் மட்டும் இன்னும் விசாரணை அதிகாரிகளால் கண்டெடுக்க முடியவில்லை.

இதைத்தவிர வீட்டினுள் வன்முறை நடந்ததற்கான எந்த அறிகுறியும் விசாரணை அதிகாரிகளால் காணமுடியவில்லை.

சம்பவம் நடந்ததாக கூறும் 16 ஆம் திகதி மாலை குடும்ப உறுப்பினர்கள் அனைவரது மொபைல் போன்கலும் அணைத்து வைக்கப்பட்டுள்ளது, இறுதியாக அணைக்கப்பட்டது செபாஸ்டீன் மொபைல் என பொலிசார் கூறுகின்றனர்.

இருப்பினும் இதுவரை விசாரணை அதிகாரிகளால் மாயமான குடும்பம் குறித்த உறுதியான தகவல்கள் எதையும் திரட்ட முடியவில்லை என கூறப்படுகிறது.

தந்தை உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது அந்த குடும்பத்திற்கு என்ன நடந்தது என்ற உறுதியான தகவலை திரட்ட முடியாமல் பொலிசார் விழி பிதுங்கி வருகின்றனர்.

SHARE