வடக்கு பிரான்சில் உள்ள Saint-Etienne-du-Rouvray என்ற தேவாலயத்தில் துப்பாக்கி ஏந்திய இருவர் மக்களை பிடித்து வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ராய்ட்டர்ஸ் வெளியிட்ட தகவலின்படி, நான்கு அல்லது ஆறு பேரை பணயக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் குறித்த இடத்திலிருந்து துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்பதாகவும், பொலிஸ் அதிகாரிகள் விரைந்துள்ளதாகவும் France 3 தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
இதற்கிடையே பொலிஸ் தரப்பில், நிலைமை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் துப்பாக்கி ஏந்திய நபர்களை பொலிசார் கைது செய்தனரா அல்லது சுட்டுக் கொன்றனரா என்ற தகவல்கள் வெளியாகவில்லை.