பிரான்சில் தொடரும் போராட்டத்தால் பெட்ரோல் விநியோகம் பாதிப்பு

268

625.117.560.350.160.300.053.800.210.160.90 (5)

பிரான்சில் தொடர்ந்து நடைபெற்று வரும் தொழிலாளர் வேலை நிறுத்த போராட்டத்தால் பெட்ரோல் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, பெட்ரோல் நிலையங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றது, பிரான்சின் பல பகுதிகளில் குறிப்பாக வடக்கு மற்றும் மேற்கு பகுதிகள், பாரிஸில் அதிகமாக பெட்ரோல் விநியோகம் தடைபட்டுள்ளது.

இதுகுறித்து போக்குவரத்துறை அமைச்சர் கூறியதாவது, பிரான்சில் நடந்து வரும் தொழிலாளர் போராட்டத்தில் பெட்ரோல் விநியோகம் தடைபடுவது சரியானது அல்ல.

தற்போது நிலவி வரும் இந்த பிரச்சனையினை தடுப்பதற்காக பிரான்ஸ் பிரதமர், சட்டப்பேரவையில் உள்ள எம்பியினருக்கு அழுத்தம் கொடுத்துள்ளார் என்று கூறியுள்ளார்.

இதற்கிடையில் CGT labourunion இதுகுறித்து கூறியதாவது, தற்போது பிரான்சில் 8 எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன, பெட்ரோல் பற்றாக்குறையை ஏற்படுத்துவது எங்கள் நோக்கம் அல்ல, அமல்படுத்தவிருக்கும் தொழிலாளர் சட்டத்தினை திரும்பபெற வேண்டும் என்பதற்காகவே போராடுகிறோம் என தெரிவித்துள்ளது.

12,000 பெட்ரோல் நிலையங்களில் பற்றாக்குறை நிலவி வருகிறது, தற்போது ஓரளவுக்கு விநியோகம் செய்யலாம், ஆனால் எப்போதும் போன்று விநியோகிக்க இயலாது என UFIP தெரிவித்துள்ளது.

SHARE