பிரான்சில் பிணைக்கைதியாக பிடிக்கப்பட்டவர்களில்பாதிரியாரை பலி எடுத்த ISIS

282

பிரான்சில் பிணைக்கைதியாக பிடிக்கப்பட்டவர்களில் தேவாலய பாதிரியார் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரான்சின் நார்மான்டி பகுதியில் அமைந்துள்ள செயின்ட் எதின்னே டு ரோவாரி தேவாலயத்தில் நுழைந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள், கத்தியைக் காட்டி மிரட்டி தேவாலயத்தில் இருந்த 5 முதல் 6 பேரை பிணையக்கைதிகளாக பிடித்துவைத்தனர். தேவாலயத்தின் பாதிரியார், இரண்டு கன்னியாஸ்திரிகள் மற்றும் வழிப்பாட்டுக்கு வந்த இரண்டு பேர் உட்பட 5 பேர் பிணைக்கைதிகளாக பிடித்துவைக்கப்பட்டனர்.

இந்நிலையில் பிரான்ஸ் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் தேவாலயத்தின் பாதிரியார் கழுத்தை அறுத்து கொல்லப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தாக்குதலில் ஈடுபட்ட இரண்டும் பேரும் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த கொலைவெறி தாக்குதலுக்கான காரணம் மற்றும் தாக்குதல் நடத்தியவர்களின் பின்னணி குறித்து விசாரணை நடைப்பெற்று வருகிறது.

France

France01

France02

France03

France04

France05

France06

France07

France08

France09

France10

France11

France12

SHARE