பாரீஸ் தாக்குதலின் முக்கிய குற்றவாளியின் இருப்பிடத்தில் கைப்பற்றப்பட்ட கணனியினை சோதனையிட்டதில், பிரான்சில் அடுத்து எந்தெந்தஇடங்களில் தாக்குதல் நடத்தப்படவேண்டும் என அத்தீவிரவாதி திட்டமிட்டிருந்த பட்டியல் கிடைத்துள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஐ.எஸ் தீவிரவாதிகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நிகழ்த்திய தாக்குதலில் 130 பேர் உயிரிழந்தனர்.
இந்தத் தாக்குதலில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளியான சலா அப்தெஸ்லாமை (26), நான்கு மாதத் தேடுதல் வேட்டைக்குப் பிறகு பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் பொலிசார் பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸெல்ஸில் கடந்த மார்ச் மாதம் 18-ஆம் திகதி கைது செய்தனர்.
அவரது கைதுக்கு நான்கு நாள்களுக்குப் பிறகு, பிரஸ்ஸெல்ஸ் விமான நிலையத்திலும், மெட்ரோ ரயில் நிலையத்திலும் 3 ஐ.எஸ் மனித வெடிகுண்டுகள் நிகழ்த்திய தாக்குதலில் 32 பேர் உயிரிழந்தனர்.
இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அப்தெஸ்லாமுடன் தொடர்புடையவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது, தற்போது பாரீஸ் நகரம் தாக்குதல் குறித்து அப்தெஸ்லாமிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில், மேலும் அதிர்ச்சியூட்டும் விடயமாக அப்தெஸ்லாவின் கணனியை சோதனையிட்டதில், Salah என்ற பெயரில் ஒரு Folder இருந்துள்ளது.
அதில், பிரான்சில் அடுத்து தாக்குதல் நடத்தப்படவிருக்கும் இடங்கள் குறித்த பட்டியல் இருந்துள்ளது, Toulouse’s விமான நிலையம், Strasbourg நகரில் உள்ள ஐரோப்பிய பாராளுமன்றம் என இன்னும் சில இடங்களை பட்டியலிட்டுள்ளான்.
இந்த இடங்களில் வெவ்வேறு முறைகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தவேண்டும், அதாவது விமான தாக்குதல், துப்பாக்கி சூடு தாக்குதல் என பட்டியலிட்டுள்ளான்.
தற்போது இந்த பட்டியலை கைப்பற்றியுள்ள அதிகாரிகள் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.