பிரான்ஸில் ஐவர் சடலங்களாக மீட்பு

84

பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 குழந்தைகள் உள்பட 5 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர்கள் தாயும் அவரது நான்கு பிள்ளைகளும் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிஸார், பிள்ளைகளின் தந்தை காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

09 மாதங்கள் முதல் 10 வயது வரையான நான்கு குழந்தைகளே நேற்று இரவு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர்கள் தொடர்பில் தகவல் வெளியாகாத நிலையில், இது குறித்த மேலதிக விசாரணைகளை பிரான்ஸ் பொலிஸார் முன்னெடுத்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

SHARE