பிரான்ஸில் கொலை செய்யப்பட்ட தமிழ் இளைஞன் – இரு வாரங்களுக்குப்பின் சடலம் உறவினர்களிடம்..

192

 

பிரான்ஸ் நாட்டில் மரணமடைந்த இந்திய இளைஞரின் உடல் 14 நாட்களுக்கு பிறகு நேற்று மாலை சொந்த ஊரான திருநறையூருக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இதில் மணிமாறன் (வயது 27) என்ற தமிழ் இளைஞரின் உடலே உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்ப கோணம் அருகே உள்ள திருநறையூர் சிவன் கோயில் சன்னதி தெருவைத் சேர்ந்தவர் விவசாயி தங்கவேலுவின் மகனே மணிமாறன்.

மணிமாறன் பி.இ. படித்துவிட்டு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் பிரான்ஸ் நாட்டுக்கு எம்.எஸ் (மாஸ்டர் ஆப் சயின்ஸ்) படிக்கச் சென்றுள்ளார்.

சில மாதங்களுக்கு முன்னர் படிப்பு முடிந்துவிட்ட நிலையில், அங்கு உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிவந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த மாதம் 23ஆம் திகதி பிரான்ஸ் நாட்டில் மர்ம நபர்களால் மணிமாறன் கொலை செய்யப்பட்டார்.

பிரான்ஸ் நாட்டிலிருந்து மணிமாறனின் உடல் விமானம் மூலம் நேற்று சென்னை வந்தடைந்துள்ளது.

மணிமாறனின் சடலத்தைப் பார்த்து உறவினர்கள் கதறி அழுதுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE