பிரான்ஸ் கடலில் சுற்றுலா சென்ற பெல்ஜியம் இளைஞர்கள் பயணித்த படகு விபத்துக்குள்ளாகி பாறையில் சிக்கி கொண்ட சம்பவம் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்சின் தெற்கு பகுதியான செயின்ட் ட்ரோப்ட்ஸ் கடற்கரையில் பெல்ஜிய நட்டைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் தனது தந்தைக்கு சொந்தமான படகில் நான்கு நண்பர்களுடன் சுற்றுலா சென்றுள்ளார்.
அவர்கள் பயணித்த படகு கடலில் உள்ள பாறையின் மேல் மோதி சிக்கி கொண்டதை அடுத்து இளைஞர்களின் சுற்றுலா பயணம் பாதியிலே முடிவுக்கு வந்துள்ளது.
ஐந்து பேரும் விபத்தில் இருந்து பாதுகாப்பாக மீண்டு வந்தாலும், அவர்கள் பயணித்து 1.4 மில்லியன் யூரோ மதிப்புள்ள படகு முற்றிலுமாக சேதமடைந்துள்ளது.
இளைஞர்களுக்கு முன் அனுபவம் இல்லாததே விபத்திற்கு காரணம் என கூறப்படுகிறது.