பிரான்ஸ் ஜனாதிபதியின் மனைவிக்கு எதிராக குவியும் மனுக்கள்

183

பிரான்ஸ் நாட்டு ஜனாதிபதியின் மனைவிக்கு அரசு ஊதியம் அளிக்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி பதவிக்கு இம்மானுவேல் மேக்ரான் போட்டியிட்டபோது ‘தேர்தலில் வெற்றி பெற்றால் தனது மனைவிக்கு ‘முதல் குடிமகள்’ என்ற அந்தஸ்த்து வழங்குவதுடன் முக்கிய பொறுப்பும் வழங்கப்படும்’ என அறிவித்தார்.

தற்போது ஜனாதிபதியாக வெற்றி பெற்றுள்ள நிலையில், தனது மனையினான பிரிஜ்ஜிட் மேக்ரானுக்கு புதிய அலுவலகம் மற்றும் உதவியாளர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளதாக இம்மானுவேல் மேக்ரான் அறிவித்துள்ளார்.

ஆனால், ஜனாதிபதியின் இந்த அறிவிப்பிற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

‘பிரிஜ்ஜிட் மேக்ரானுக்கு முதல் குடிமகள் என்ற அந்தஸ்த்தை வழங்கலாம். ஆனால், முக்கிய பொறுப்பு அளிப்பதன் மூலம் அவருக்கும் அவரது உதவியாளர்களுக்கும் அரசு ஊதியம் அளிக்கும் சூழல் ஏற்படும்.

மக்களின் வரிப்பணத்தில் பிரிஜ்ஜிட்டிற்கும் அவரது உதவியாளர்களுக்கும் ஊதியம் வழங்க கூடாது’ என கோரிக்கை எழுந்துள்ளது.

ஓன்லைன் மூலம் நடைபெறும் போராட்டத்தில் இதுவரை 1,88,000 பேர் கையெழுத்திட்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

இதன் மூலம், ஜனாதிபதியின் மனைவிக்கு அரசு ஊதியத்துடன் ஆட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE