பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் வாடிக்கையாளர்கள் நிர்வாணமாக அமர்ந்து உணவருந்த அனுமதிக்கும் புதிய உணவகம் ஒன்று திறக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரித்தானிய தலைநகரான லண்டனில் Bunyadi என்ற உணவகம் அண்மையில் திறக்கப்பட்டு பரபரப்பாக செயல்பட்டு வருகிறது.
பிற உணவகத்தை போல் இல்லாமல், இந்த உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் வெளி உலகத்திலிருந்து விலகி இருப்பது போன்ற ஒரு சூழல் உருவாக்கப்பட்டிருக்கும்.
உணவகத்திற்குள் நுழையும்போது செல்போன்கள், கணிணி என எந்தவித பொருட்களையும் கொண்டு செல்ல அனுமதி கிடையாது.
குறிப்பாக, இந்த உணவகத்திற்கு செல்லும் ஆண் மற்றும் பெண் வாடிக்கையாளர்கள் முழு நிர்வாணமாக அமர்ந்து உணவருந்த வேண்டும்.
மேலும், இங்கு வழங்கப்படும் அனைத்து உணவுகளும் எவ்வித கலப்பிடமும் இல்லாத இயற்கையான உணவுகள் ஆகும்.
இந்த உணவகம் திறக்கப்பட்ட நாளிலிருந்து தற்போது வரை 46,000 பேர் உணவகத்திற்கு செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், லண்டனில் உள்ள இந்த உணவகம் இன்னும் சில நாட்களில் மூடப்படுகிறது.
பின்னர், பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் இந்த உணவகம் திறக்கப்பட உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து உணவக செய்திதொடர்பாளர் பேசியபோது, ‘இதுபோன்ற ஒரு திட்டம் எங்களிடம் உள்ளது உண்மைதான். ஆனால், எப்போது திறக்கப்படும் என உறுதியாக திட்டமிடவில்லை.
எனினும், எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் பாரீஸில் இந்த உணவகம் திறக்க வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.