பிரான்ஸில் கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் நடத்தப்பட்ட கத்தோலிக்க ஆதாரணையில் தமது ஒத்துழைப்பை காட்டும் வகையில் முஸ்லிம்களும் பங்கேற்றுள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமையன்று இடம்பெற்ற இந்த தாக்குதல் சம்பவத்தில் குறித்த தேவாலயத்தின் மூத்த பாதிரியார் கொடூரமான முறையில் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டார்.
ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவாதிகளினால் ருயின் பகுதியில் உள்ள தேவாலயத்தில் புகுந்த தீவிரவாதிகள் பணய கைதிகளாக பிடித்து வைத்திருந்த மூத்த பாதிரியாரை படுகொலை செய்தனர்.
இந்நிலையில் இதனை கண்டிக்கவும் பிரான்ஸின் ஒருமைப்பாட்டுக்கு ஆதரவை வழங்கும் வகையிலும் பாதிரியாருக்கான கத்தோலிக்க ஆராதனையில் பங்கேற்கவேண்டும் என பிரான்ஸின் முஸ்லிம் பேரவை கோரிக்கை விடுத்திருந்த நிலையிலேயே நாடளாவிய ரீதியில் முஸ்லிம்களும் ஆராதணைகளில் பங்கேற்றனர்.