பிரான்ஸ் நாட்டின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஜீன் மெரின் சூவிற்கும் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவிற்கும் இடையில் சந்திப்பு

185

பிரான்ஸ் நாட்டின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஜீன் மெரின் சூவிற்கும் (JEAN MARINE SCHUH), கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பு நேற்று மாலை கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்றுள்ளது.

சந்திப்பின் போது பிரான்ஸ் அரசினதும்,ஜரோப்பிய நிதியத்தினதும் அனுசரனையுடன் 150 மில்லியன் யூரோ செலவில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற முந்தனி ஆற்று திட்டம் பற்றி கலந்துரையாடப்பட்டது.

இந்நீர்ப்பாசன திட்டம் மகா ஓயா பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படுவதுடன் இத்திட்டத்தின் மூலம் மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளுக்கு இரண்டு போக செய்கைகளுக்கும் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண சுற்றுலா,மீன்பிடி மற்றும் துறைமுகத்தை அண்டியுள்ள முதலீட்டு திட்டங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேலும், சந்திப்பின் போது கிழக்கு மாகாண ஆளுநர் செயலாளர் அசங்க அபேவர்தன கிழக்கு மாகாண ஆளுநரின் ஊடக செயலாளர் ஹஸன் அலால்தீன் மற்றும் பிரத்தியேக செயலாளர் பூலோகசிங்கம் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

SHARE