பிரித்தானியா இளவரசி டயானா உயிரிழந்து 20 ஆண்டுகள் ஆவதை தொடர்ந்து அவர் மகன் இளவரசர் வில்லியம் அவர் இறந்த பாரீஸ் நகருக்கு செல்லவுள்ளார்.
இளவரசி டயானா கடந்த 1997ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரீஸ் நகரில் ஏற்பட்ட கார் விபத்தில் உயிரிழந்தார்.
அவர் இறந்து 20 வருடங்கள் ஆவதை தொடர்ந்து அவர் இறந்த பாரீஸ் நகருக்கு டயானாவின் மகனும், இளவரசருமான வில்லியம் அவர் மனைவி இளவரசி கேட் உடன் மார்ச் மாதத்தில் வருகை தரவுள்ளார்.
அதன்ப்படி பாரீஸ் நகரில் மார்ச் 17 மற்றும் 18 ஆகிய இரு திகதிகள் அவர்கள் அங்கு தங்குவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தன் தாய் இறந்த பிறகு தற்போது தான் வில்லியம் முதல் தடவையாக பாரீஸ் வரவுள்ளார் என்பது முக்கிய விடயமாகும்.
ராஜ குடும்ப தம்பதிகள் பாரீஸில் எட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்கள்.
இளம் பிரஞ்ச் தலைவர்களை வரவேற்பு நிகழ்ச்சி, தூதுவர் இல்லத்தில் இரவு விருந்து ஆகிவை இதில் அடங்கும்.
இளவரசர் மற்றும் இளவரசியின் முழு பயண விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.