பொதுமக்கள் சமூக வலைத்தளமான ட்விட்டரில் தன்னிடத்தில் அவர்கள் கேட்க விரும்பும் கேள்விகளை கேட்கலாம் என நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல் தெரிவித்திருந்த நிலையில் உங்களுக்கு பிடித்த நூல் எதுவென கேள்வியெழுப்பியிருந்தார் ரசிகர் ஒருவர். அதற்கு பதிலளித்த கமல் தன்னை மிகவும் பாதித்த நூல் பூணுல் என பதிலளித்திருந்தார்.
எளிய மக்களிடமிருந்து தங்களை உயர்ந்தோர் என காட்டிக்கொள்ள ஓர் அடையாள சின்னமாக பூணுல் பயன்படுத்த படுகிறது என்ற நோக்கிலேயே கமல் அவ்வாறு பதிலளித்திருந்ததாக தெரிகிறது.
இந்நிலையில், கமல் பிராமண சமுதாயத்தினை இழிவுபடுத்திவிட்டதாக கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு பிராமணர் சங்கம்.