68 வயதான முதியவர் ஒருவர் இதுவரை எட்டு திருமணம் செய்திருப்பதும், தற்போது ஒன்பதாவது முறை திருமணம் செய்ய முயற்சி செய்து கொண்டிருக்கும் சம்பவம் பிரிட்டனில் அரங்கேறியுள்ளது.
பிரிட்டன் நாட்டை சேர்ந்தவர் ரான் ஷெப்பர்ட் (68). கல்யாண மன்னனான இவர் இதுவரை எட்டு பெண்களை திருமணம் செய்துள்ளார். 1966 ஆம் ஆண்டு தனது 19வது வயதில் முதல் பெண்ணை திருமணம் செய்தார் ஷெப்பர்ட்.
அடுத்தடுத்த திருமண விவாகரத்துக்கு பிறகு 2004ல் எட்டாவதாக Weng Plantino என்ற பெண்ணை திருமணம் செய்தார்.
கடந்த 2015 வருடம் வரை இணைந்து வாழ்ந்த இவர்கள் பின்னர் பிரிய முடிவெடுத்தனர். முக்கியமாக தன்னை ஷெப்பர்ட் கொடுமைபடுத்துவதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
மேலும் தான் அவரை விலகி வேறு இடத்துக்கு சென்று விட்டாலும் அவர் தன்னை தொடர்ந்து வந்து சந்தித்து தொல்லை கொடுப்பதாக கூறியிருந்தார்.
அதற்கு நீதிமன்றம் ஷெப்பர்ட் இனி இரண்டு வருடங்களுக்கு அவரை தொந்தரவு செய்ய கூடாது என உத்தரவிட்டது, நான் செய்தது தவறு தான் என்னை மன்னித்து விடுங்கள் என ஷெப்பர்ட் பின்னர் நீதிமன்றத்தில் கூறினார்.
பின்னர் கல்யாண மன்னன் ஷெப்பர்ட் அளித்த பேட்டியில், நான் இதுவரை தனிமையில் வாழ்ந்ததேயில்லை. இப்போது தான் மனைவி இல்லாமல் வாழ்கிறேன்.
இது நிரந்தரமல்ல ஏனென்றால் நாம் மீண்டும் ஒரு பெண்ணிடம் என் காதலை வெளிப்படுத்தி விட்டேன், அவர் பெயர் Cristel Marquez, பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த அவரை விரைவில் பிரிட்டனுக்கு அழைத்து வரவுள்ளேன் என கூறுகிறார்.
தற்போது ஷெப்பர்ட் திருமணம் செய்யவிருக்கும் Cristel என்னும் பெண் அவரை விட 40 வயது சிறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

