பிரிட்டனில் மாவீரர் தின நிகழ்வுகளை நடாத்த அனுமதி-இலங்கையிலும் அனுமதி கிடைக்குமா???

299
பிரிட்டனில் மாவீரர் தின நிகழ்வுகளை நடாத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

போரில் வீர மரணமடைந்த தமிழீழ விடுதலைப் புலி போராளிகளை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகளை நடாத்த பிரிட்டன் அரசாங்கம் அனுமதியளித்துள்ளது.

எதிர்வரும் 27ம் திகதி லண்டனின் டெட்லீ மத்திய நிலையத்தில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.

பிரிட்டனில் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் இணைப்புக் குழு என்ற அமைப்பின் கோரிக்கைக்கு அமைய இவ்வாறு மாவீரர் தின நிகழ்வுகளை நடாத்த பிரிட்டன் அரசாங்கம் அனுமதியளித்துள்ளதாக சிங்கள பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக வீரச்சாவை தழுவிக் கொண்ட தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகளின் குடும்ப உறுப்பினர்களும் அதே தினத்தில் கௌரவிக்கப்பட உள்ளனர்.

இந் நினைவு கூரல்கள் லண்டனின் கன்ரே சமூக மத்திய நிலையத்தில் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE