பிரிட்டன் தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! ஊதியம் கூடுகிறது

273

625-500-560-350-160-300-053-800-748-160-70-3

பிரிட்டனில் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச கூலி உயர்வு தொடர்பாக இன்று முக்கியமான அறிவிப்பு வெளியாகிறது.

பிரிட்டனில் தொழிலாளர்களுக்கு ஒருமணிநேரத்திற்கு குறைந்தபட்ச ஊதியமாக 18 முதல் 20 வயதுக்குட்பட்டோருக்கு 5.55 பவுண்டுகளும், 21 முதல் 24 வயதுக்குட்பட்டோருக்கு 6.95 பவுண்டுகளும், 25 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 7.20 பவுண்டுகளும் வழங்கப்படுகிறது.

இதனை அதிகரிக்க வேண்டும் எனக்கோரி அந்நாட்டின் தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்ததன் விளைவாக அரசு ஆலாசனை நடத்தியது.

இதனையடுத்து 25 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான கூலியை 7.20-லிருந்து 7.50ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு பிரிட்டன் நிதியமைச்சர் பிலிப் ஹாமண்ட் இன்று வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE