பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினருடன் கலந்துரையாடிய புலம்பெயர் தமிழர்கள்

101
இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது ஸ்ரீ லங்கா அரசு,இராணுவத்தினரால் தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனவழிப்புக்கு எதிராக இலங்கையை சர்வதேச நீதி மன்றத்திற்கு பரிந்துரை செய்யக்கோரியும், பிரித்தானிய பாராளுமன்றத்தில் வரவிருக்கின்ற ஆயுத விற்பனை தொடர்பான விவாதத்திற்கு ஆதரவளிக்கும்படியும் நாடு கடந்த தமிழீழ அரசாங்க உறுப்பினர்கள்  லண்டன் Eastham பகுதி நாடாளுமன்ற உறுப்பினர்  Stephen timms அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
  
கடந்த 06.07.2018 அன்று மதியம் 2.30 மணியவில் பகுதியில் நடைபெற்றிருந்த சந்திப்பில் நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதி மனித உரிமை அமைச்சர் கந்தப்பு ஆறுமுகம் , உறுப்பினர்களான நுஜிதன் இராசேந்திரம்,பொன்ராசா புவலோஜன், அசாந்தன்  தியாகராசா ஆகியோர் கலந்துகொண்டனர்
குறித்த சந்திப்பில் தற்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையினால் கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றதா என்பது பற்றியும் ஆராயப்பட்டதுடன் நாடு கடந்த தமிழீழ அரசின் கண்ணானிப்பு குழுவின் (MAP) அறிக்கையும் இலங்கையை சர்வதேச நீதிமன்றுக்கு ஏன் பரிந்துரை செய்ய வேண்டும் என்பது பற்றிய அறிக்கையும் குறித்த உறுப்பினர்களால் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பிரித்தானிய பாராளுமன்றத்தில் வரவிருக்கின்ற இலங்கைக்கு எதிரானஆயுத விற்பனை தொடர்பான விவாதத்திற்கு ஆதரவளிக்கும்படியும் அது தொடர்பான விடயங்களும் கலந்துரையாடப்பட்டது. இதன் தொடர்பாக அதிக கவனம் எடுப்பதாகவும் குறித்த பாராளுமன்ற விவாதத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக கூறியதோடு அது தொடர்பான ஆவணத்தில் கையொப்பம் இட்டதோடு தற்போது வடகிழக்கு பிரதேசங்களில் நடைபெற்றுவரும் முக்கிய பிரச்சினைகளான காணி அபகரிப்பு,வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான பல்வேறு விடயங்கள் தொடர்பாக சுமார் ஒரு மணித்தியாலதிற்கு மேலாக கலந்துரையாடப்பட்டது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த Stephen timms கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பாக இலங்கைக்கு இம்முறை அழுத்தம் கொடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
SHARE