பிரித்தானியர்களுக்கு கடும் எச்சரிக்கை

146

பிரித்தானியாவில் டோரிஸ் புயலின் தாக்கம் கட்டடங்கும் முன்னர் அடுத்த புயலின் எச்சரிக்கையை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்.

பிரித்தானியாவில் கடந்த வாரம் வீசிய டோரிஸ் புயலின் தாக்கம் இன்னும் முழுமையாக விட்டகலாத நிலையில், அடுத்த 12 நாட்களுக்கு கடுமையான பனிப்பொழிவு இருக்க வாய்ப்பு உள்ளதாக பிரித்தானிய வானிலை ஆய்வு மையம் நேற்று எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில் வானிலை ஆய்வு மையம் அடுத்த புயல் குறித்த கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளது. வடமேற்கு பிரித்தானியா, வேல்ஸ் மற்றும் கிழக்கு ஸ்காட்லாந்து உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அயர்லாந்து வானிலை ஆய்வு மையமே முதன்முறையாக குறித்த புயலுக்கு ஈவன் என பெயரிட்டு அழைத்துள்ளது. இந்த ஆண்டில் மட்டும் பிரித்தானிய சுற்றுவட்டாரத்தை தாக்கும் 5-வது புயல் இந்த ஈவன், அதுவும் இந்த இரண்டு மாதத்தில்.

ஈவன் புயலானது அயர்லாந்தையை கடுமையாக தாக்க கூடும். ஆனால் புயலின் உக்கிரமானது பிரித்தானியாவை புரட்டிப்போடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

காற்றின் வேகம் 50 முதல் 60மீ வரை இருக்கும் என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், இது கடற்கரை பகுதிகளில் 70மீ வரை இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

மார்ச் மாத மத்திய பகுதி வரை கடுமையான பனிப்பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்ததை அடுத்து ஒட்டுமொத்த பிரித்தானியர்களும் தயாராகி வரும் நிலையில் ஈவன் புயல் குறித்த கடும் எச்சரிக்கை பொதுமக்களை ஆட்டம் காண செய்துள்ளது.

SHARE