பிரித்தானியாவில் பிரெக்ஸிற் தொடர்பான தேர்தல் வெற்றிகிட்டிய பின்னர் பல்லாயிரக்கணக்கான பிரித்தானியர்கள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் குடியுரிமைக்கு விண்ணப்பித்துவரும் நகர்வுகள் குறித்த தரவுகள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக அயர்லாந்தின் இரட்டைக்குடியுரிமையை பெற்றுக்கொள்ள முனையும் பிரித்தானியர்களின் எண்ணிக்கை பிரெக்ஸிற் தேர்தலுக்குப்பின்னர் இரட்டை மடங்காக அதிகரித்துள்ளது.
இதேபோல பிரித்தானியாவில் வாழும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் குடிமக்களும் பிரித்தானிய இரட்டைக்குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் நகர்வுகளும் அதிகரித்துள்ளன