பிரித்தானியர்கள் ஆட்சி காலத்தில் அரசியல் மாற்றங்கள்
பிரித்தானியர்கள் 1796ஆம் இலங்கையை கைப்பற்றிய போதும் ஒரே நிர்வாகத்தின் கீழ் 1815ஆம் ஆண்டு தான் முழுமையாக கைப்பற்றினர். போர்த்துகேயரும் ஒல்லாந்தரும் இலங்கையின் கரையோர பகுதிகளை மாத்திரமே ஆட்சி செய்தனர். கண்டி இராச்சியத்தை கைப்பற்ற அவர்களால் முடியவில்லை. ஆனால் பிரித்தானியர் 1815ஆம் ஆண்டு கண்டியையூம் கைப்பற்றி இலங்கையில் பல்வேறு அரசியல் மாற்றங்களை ஏற்படுத்த அவர்களுக்கு சாதகமாக இருந்தது.
பிரித்தானியர் இலங்கையை ஆட்சி காலத்தின் போது அரசியல் மாற்றங்கள் நிறுவன ரீதியில் வளர்ச்சி அடையந்ததை நாம்மால் பார்க்கலாம் 1833அம் ஆண்டு கோல்புறுக் சீர்திருத்தத்தில் அறிமுகப்படுதத்தப்பட்ட சட்டசபை உத்தியோகபற்றற்றவர்களில் ஐரோப்பியர்கள்-3 பறங்கியர்கள்-1 தமிழர்கள்-1 சிங்களவர்-1 என நிர்வாகத்தை வழங்கினர். இந்த யாப்பின் கீழ் உத்தியோகபற்றற்றவர்களிற்கு மசோதாவை கொண்டு வரும் அதிகாரம் வழங்கப்படவில்லை. ஆனால் 1859ஆம் அவர்களிற்கும் மசோதாவை கொண்டு வரும் அதிகாரம் வழங்கப்பட்டது.
கோல்புறுக் சட்டசபையில் அறிமுகப்படுத்தப்படுத்தப்பட்ட சட்டசபை பிற்காலத்தில் பாராளுமன்றம் என்கின்ற மிகப் பெரிய அமைப்பு தோன்றுவதற்கு காரணமாக அமைந்தது. பிறகு இந்த சட்ட சபையின் கட்டமைப்பு 1912ஆம் ஆண்டு குரு-மெக்கலம் சீPPர்திருத்ததத்தில் மாற்றமடைந்தது. இதில் உத்தியோகபற்றற்றவர்களில் நியமன உறுப்பனர்கள் தெரிவூமுறை என்ற ஒரு புதிய அம்சம் தோற்றம் பெற்றது. கோல்புறுக் அரசியல் அமைப்பில் பிரதிநிதித்துவம் என்கின்ற அம்சம் அறிமுகப்படுத்தபப்பட்டது.
இதுவே 1912ஆம் ஆண்டு வளர்ச்சியடைந்து தேர்தல் முறை இலங்கைக்கு முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. அனால் இந்த தேர்தல் முறையில் அனைவருக்கும் வாக்குரிமை வழங்கும் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. சொத்துடையவர்கள் கல்விகற்றவர்கள் போன்றௌருக்கே வாக்குரிமை வழங்கப்பட்டது. அனால் பிற்காலத்தில் இலங்கையில் உள்ள சகலரிற்கும் வாக்குரிமை வழங்குவதற்கு ஏதுவான காரணியாக அமைந்தது. அதேளை மக்களால் தெரிவூசெய்யப்பட்ட பிரதிநிதிகளும் ஆட்சியில் பங்குபற்ற வேண்டும் என்ற சிந்தனை தோன்றியது. அந்தவகையில் இலங்கை மக்கள் முதல் முறையாக அதிகார அரசியலில் பங்குபற்றிய காலமாக இது கணிக்கப்படுகின்றது.
குரு-மெக்கலம் காலப்பகுதியிலேயே இலங்கை அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனை இடம் பெற்றது. 1915ஆம் ஆண்டு சிங்கள முஸ்லிம் கலவரம் இடம்பெற்றது. ஆரம்பத்தில் கண்டியில் தொடங்கிய இக்கலவரம் பின்னர் நாடு முழுவதும் பரவியது. பிரித்தானிய அரசாங்கம் இக்கலவரத்தை நசுக்குவதற்கு அவசரகால சட்டம் (ஊரடங்கு சட்டம்) என்பவற்றை பிரகடனப்படுத்தயது. பல சிங்கள தலைவர்களை கைத செய்து சிறையில் அடைத்தனர். பிற்காலத்தில் இலங்கையின் பிரதமராக விளங்கிய D.S. சேனநாயக்கா உட்பட பல சிங்கள அரசியல் தலைவர்கள் சிறைக்குள் தள்ளப்பட்டனர். பலர் சுட்டு கொல்லப்பட்டதுடன் பலருக்கு மரண தன்டனையூம் வழங்கப்பட்டது.
இக்கலவரமும் அதனை அடக்குவதற்கு பிரித்தானிய அரசாங்கம் கைக்கொண்ட வழிமுறையூம் இலங்கை மக்களிற்கிடையே ஓர் விழிப்புனர்ச்சியை ஏற்படுத்தியது. இவ்விழிப்புனர்ச்சி இலங்கை அரசியலில் இரண்டு பிரிவினராக திகழ்ந்த சிறுபான்மையினரும் பெறும்பான்மையினரும் ஒன்றினைந்தனர்.
1921ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட தற்காலிக மெனிங் சீர்திருத்தத்தில் சட்டசபையில் உத்தியோகபற்றுள்ள உறுப்பினர்களை விட உத்தியோகபற்றற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. உத்தியோகபற்றுள்ளவர்கள்-14 உத்தியோகபற்றற்றவர்கள்-23 உத்தியோகபற்றற்றவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டமையானது இலங்கையர்கள் அதிகளவில் அரசியலில் பங்குபற்றினர். இது இலங்கை அரசியல் வரலாற்றில் இடம் பெற்ற மிகப் பெரிய ஒரு மாற்றமாகும். மேலும் இச்சீர்திருத்தத்திலேயே பிரித்தானியர் இலங்கைக்கு பிரதேசவாரி பிரதிநிதித்துவ தேர்தல் முறையை அறி;முகம் செய்து வைத்தனர். இது பிற்காலத்தில் தேர்தல் தொகுதிகள் தேர்தல் மாவட்டங்கள் உருவாக காரணமாக அமைந்தது.
மேலும் இது தொடர்ச்சியாக 1931ஆம் ஆண்டு டொனமுர் இடம் பிடித்ததுது. சோல்பரி யாப்பில் இலங்கையில் முதன் முறையாக சட்டசபை பாராளுமன்றம் என பெயர் வழங்கப்பட்டது. இச்சொல்லே இன்று வரைக்கும் காணப்படுகின்றது. அதேவேளை ஏனைய அரசியலமைப்பு சீர்திருத்தங்களை விட சோல்பரி யாப்பில் பெறும்பான்மை மக்கள் சட்டசபையில் இலங்கையராகவே இருந்தனர். எனவே சட்ட சபை என்ற ஒரு நிறுவனம் 1833ஆம் ஆண்டிலிருந்து 1947ஆம் வரை ஏற்பட்டுள்ள மாற்றத்தினை நாம் பார்க்கலாம். அடுத்ததாக நிருவாக துறை என்ற நிறுவனம் எவ்வாறு வளர்ச்சியடைந்து இருக்கின்றது என நாம் பார்த்தால் கோல்புறுக் சீர்திருத்தத்தில் சகல அதிகாரமும் மகாராணியிடமிருந்து தேசாதிபதியிற்கு வழங்கப்பட்டது. மசோதாக்களை கொண்டுவருதல் அவற்றை நடைமுறைப்படுத்தல் போன்ற விடயங்களை குறிப்பிடலாம். குறு-மெக்கலம் சீர்திறுத்தத்தில் மக்களால் தெரிவூசெய்யப்பட்ட பிரதிநிதிகளிற்கு அதிகாரங்கள் கையளிக்கப்பட வேண்டும் என்ற சிந்தனை வளர்ச்சியடைந்தது. இதுவே டொனமுரில் இலங்கையர்கள் பெறும்பான்மையினர் ஆட்சியில் பங்கு பற்றும் ஒரு முறையாக பிரித்தானியர் நிருவாக குழுமுறையை தாபித்தனர். இதன் காரணமாக நிர்வாகத்தில் இலங்கையில் வாழும் பலவேறு இனங்களும் பங்குபற்றினர். இந்த நிர்வாக தாபனமானது பிரித்தானியர்கள் அவர்களது நாட்டில் கானப்படுவது போல் தாபித்தனர். ஏனெனில் 1947ஆம் ஆண்டில் தாபிக்கப்பட்ட சோல்பரியில் பாராளுமன்றம் அமைச்சரவை பிரதமமந்திரி போன்று அங்குள்ள விடயங்களை ஒரே அடியாக கொண்டு வந்தனர்.
பிரித்தானியர் இலங்கையில் ஏற்படுத்திய அரசியல் மாற்றங்களில் முக்கிய விடயமாக வாக்குரிமையை குறிப்பிடலாம். குறுமெக்கல காலப்பகுதியில் உத்தியோகபற்றற்ற உறுப்பினர்களில் சிலர் தெரிவூசெய்யப்பட்ட உறுப்பினர்களாக இருந்தனர். இவர்கள் வாக்களி;ப்பின் முலம் தெரிவூ செய்யப்பட்டனர். இருப்பினும் 1912ஆம் ஆண்டு வாக்குரிமையில் மட்டுப்பாடுகளை விதித்தனர். இது தொடர்ந்து மெனிங் சீர்திருத்தம் மெனிங்டிவன்சயர் வரைக்கும் இருந்தது. பிறகு 1931ஆம் ஆண்டு டொனமுரில் முதன் முறையாக இலங்கையில் உள்ள சகல மக்களிற்கும் வாக்குரிமை வழங்கினர். இன்று இலங்கையில் வாக்குரிமை நிலவூவதற்கு இவர்களே வித்திட்டனர். அடுத்ததாக பிரித்தானியர்கள் இலங்கையில் ஏற்படுத்திய அரசியல் மாற்றங்களில் முக்கியமானது கட்சி முறை அரசியலாகும். 1833ஆம் ஆண்டு ஆங்கில கல்வி அறிமுகப்படுத்தியபோது இலங்கையில் உள்ள சொத்துடையவர்கள் கல்வி கற்பதற்கு ஏதுவான காரணியாக இருந்தது. இவர்கள் வெளிநாடுகளில் கல்வி கற்று பின்னர் நாடு திரும்பி பிரித்தானியருக்கு எதிராக கட்சிகளை உருவாக்கினர்.
1915ஆம் ஆண்டு சிங்கள முஸ்லிம் கலவரம் ஏற்பட்டபோது அதனை பிரித்தானியர் அடக்கிய முறை இலங்கை மக்களிக்கிடையில் ஒரு தேசிய உணர்வூ ஏற்பட்டு அனைவரும் ஒன்றினைந்து ஒரே சிந்தனையின் கீழ் 1919ஆம்; ஆண்டு இலங்கை தேசிய காங்கிரஸை உருவாக்கினர். எனினும் இது 1921ஆம் ஆண்டு பிரிவடைய தொடங்கியது. எனினும் கட்சிகள் என்ற அடிப்படையில் பிரித்தானியர்க்கு எதிராகவே இருந்தது. அத்துடன் இக்காலப்பகுதியில் தேர்தல் முறை காணப்பட்டதால் வேட்பாளர்கள் மத்தியில் பிரச்சாரங்களை மேற்கொள்ளும் போது தனித்து மேற்கொள்ளாமல் பலர் சேர்ந்து ஒரு அமைப்பை உருவாக்கி அவ்வமைப்புக்கென கொள்கை திட்டங்களையூம் வேலை திட்டங்களையூம் வகுத்து பிரச்சாரங்களை மேற்கொண்டனர். இவ்வமைப்புக்களே பிற்காலத்தில் இலங்கையில் ஆட்சியை கைப்பற்றும் கட்சிகளாக மாறின.
பிரித்தானியர்கள் இலங்கையில் தங்களுடைய அரசியலை மேற்கொள்வதற்காக பிரித்தாலும் கொள்கை அறிமுகப்படுத்தினர். குறிப்பாக சிங்கள தமிழ் பேசும் மக்களிக்கிடையில் குழப்பத்தை ஏற்படுத்துவதில் பல்வேறு தந்திரோபாயங்களை கையாண்டனர். 1833ஆம் ஆண்டில் இனவாரி பிரதிநிதுத்துவத்தை வழங்கினர். இது பிற்காலத்தில் இலங்கையில் இனப்பிரச்சினையை ஏற்படுத்துவதற்கு முக்கிய காரணமாக இருந்தது. தொடர்ந்தும் 1912ஆம் ஆண்டு குறு-மெக்கலம் சீர்திருத்தத்தில் இனவாரி பிரதிநிதித்துவத்தில் முஸ்லிம்களிற்கும் ஒரு ஆசனத்தை வழங்கினர்.
மேலும் இதனை 1921ஆம் ஆண்டு மற்றும் 1924ஆம் ஆண்டு யாப்புகளிலும் அதிகரித்தனர். டொனமுர் சீர்திருத்தத்தில்;தான் இலங்கையில் அவர்கள் இதனை ஒழித்தனர். இந்நடவெடிக்கைக்கு காரணம் பிரித்தானியர் கையான்ட பிரித்தாலும் கொள்கை முலம் இலங்கையில் சிறுபாண்மை பெறும்பாண்மை என தௌpவாக பிரிக்கப்பட்டது.