பிரித்தானியாவிற்கு வானிலை மையத்தின் எச்சரிக்கை

303
பிரித்தானியாவில் அதிக காற்றழுத்தம் நிலவி வருவதன் காரணமாக தரையிரங்கும் விமானங்கள் திருப்பிடவிடப்பட்டுள்ளதோடு மட்டுமல்லாமல், சில முக்கிய சாலைகளும் மூடப்பட்டுள்ளன.* பிரித்தானியாவில் 100mph வேகத்திற்கு பலத்த காற்று வீசுவதால், Gatwick விமான நிலையத்தில் தரையிரங்க வந்த விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.

* South West, Isle of Portland, Berry Head and Thorney Island ஆகிய பகுதிகளில் 70mph வேகத்தில் காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* குறிப்பாக, இங்கிலாந்தின் Hampshire , Sussex, Surrey, மற்றும் Kent போன்ற நகரங்களில் மோசமான வானிலை நிலவும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

* பலத்த காற்று காரணமாக, இங்கிலாந்தின் Dartford ஆற்றை கடக்கும் பாதை மற்றும் M48 Severn பாலத்தின் பாதைகள் மூடப்பட்டுள்ளன.

* சாலைகளை கடக்கும் பயணிகள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவும், மேலும் உங்கள் பயணத்தின் தாமதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் அதனை கவனத்தில் கொள்க.

* பிரித்தானியாவின் வட கிழக்கு பகுதியில் இருந்து பலத்த மழை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதியினை நோக்கி நகர வாய்ப்புள்ளது, மேலும், பலத்த காற்று காரணமாக மரங்களின் கிளைகள் உடைந்து விழுவதற்கு வாய்ப்புள்ளதால் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் எச்சரிக்கையாக செல்லவும்.

* முக்கியமாக, இங்கிலாந்தின் கிழக்கு கடற்கரை மற்றும் தெற்கு கடற்கரையில் பகுதிக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்கவும்.

Inland – இல் 60mph வேகத்திற்கு காற்று வீசுகிறது, ஆனால் இதன் வேகம் 70mph ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* வடக்கு அயர்லாந்து, ஸ்கொட்லாந்து போன்ற பகுதிகள் கேட்டி புயலில் இருந்து தப்பித்துவிட்டதால், இங்கு குறைவான காற்றழுத்தமே நிலவி வருகிறது.

SHARE