பிரித்தானியாவில் 11 வயது சிறுவன் ஒருவன் தனது 9 வயது தங்கையை இரண்டு முறை பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது, இச்சிறுவனின் வீட்டில் ஒரு முறை பண்டிகை நடைபெற்றபோது, இவன் தனது தங்கையை 2 முறை பலாத்காரம் செய்துள்ளான்.
இது தொடர்பான புகைப்படங்களை தனது கைப்பேசியில் பதிவு செய்து வைத்துக்கொண்டதன் மூலம் பிடிபட்டுள்ளான்.
இது தொடர்பான வழக்கு விசாரணை Bodmin Magistrates நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இதனை விசாரித்த நீதிபதி Diane Baker, அச்சிறுவனை பார்த்து, நீ செய்த காரியம் உனக்கு தெரியுமா? உனது தங்கையின் வாழ்க்கையை சீரழித்துவிட்டாய்.
மேலும், நீ செய்த குற்றத்திற்காக, சிறுவர் சீர்திருத்த பள்ளியில் 12 மாதங்கள் இருக்க வேண்டும், இந்த தண்டனை காலத்தினை ஏற்க மறுத்தால், மறுபடியும் நீதிமன்றத்தின் முன்பு நிறுத்தப்படுவாய் என்று கூறியுள்ளார்.
உனக்கு 11 வயது தான் ஆகிறது, தற்போது நீ அனுபவிக்கபோகும் தண்டனையின் மூலம் உனது பழக்கவழக்கத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட வேண்டும்.
மேலும் இந்த காலகட்டத்தில் உனது குடும்பத்தினரை இழந்து நீ வருத்தப்படுவாய் என்பது எனக்கு தெரியும், ஆனால் நீ செய்த தவறு வருந்ததக்க ஒன்று என கூறியுள்ளார். தற்போது, இச்சிறுவன் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளான்.