பிரித்தானியாவில் அதிகரிக்க போகும் வேலையில்லா திண்டாட்டம்

213

பிரித்தானியாவில் அடுத்த ஆண்டிலிருந்து வேலையின்மை பிரச்சனை அதிகரிக்கும் என தனியார் அரசு சாரா குழுவின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

பிரித்தானியாவின் அரசு சாரா பொருளாதார முன்கணிப்பு குழுவான EY Item Club வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த வருடம் 4.7 சதவீதமாக இருக்கும் வேலையின்மை பிரச்சனை அடுத்த வருடம் 5.4 சதவீதமாக உயரும் என கூறப்பட்டுள்ளது.

அதன் பிறகு 2019ல் வேலையில்லா திண்டாட்ட பிரச்சனை 5.8 சதவீதமாக மேலும் அதிகரிக்கும்.

கடந்த 2009-க்கு பின்னர் பிரித்தானியாவில் வேலைவாய்ப்புகள் தற்போது தான் குறைவதாக தெரிவிக்கபட்டுள்ளது.

ஏற்கனவே வேலையில் இருக்கும் ஊழியர்களை நிறுவனங்கள் அதிகமாக பயன்படுத்துவதால், புதிதாக வேலை வாய்ப்புக்கான ஆட்களின் தேவைகள் குறைகிறது.

இதுகுறித்து EY Item Club-ன் மூத்த பொருளாதார ஆலோசகர் Martin Beck கூறுகையில், பிரித்தானியாவின் தொழிலாளர் சந்தையே அதன் சொந்த வெற்றியை தடுக்கும் சூழல் உருவாகியுள்ளது.

ஏற்கனவே வேலையில் உள்ள மக்களின் விகிதம் அதிகமாக உயர்ந்துள்ளதால், புதிய ஊழியர்களை நிரப்புவது நிறுவனங்களுக்கு கடினமான ஒன்றாக மாறி வருகிறது என Martin கூறியுள்ளார்.

பிரித்தானியாவில் வேலை செய்பவர்களின் சராசரி வருமானம் இந்த வருடத்திலிருந்து 2.75 சதவீதம் உயரக்கூடும் எனவும் தெரியவந்துள்ளது.

SHARE