பிரித்தானியாவில் ஆண் கர்ப்பமாக இருக்கும் அதிசயம்! எப்படி சாத்தியம்?

216

பிரித்தானியா நாட்டை சேர்ந்தவர் Hayden Cross (20) பிறக்கும் போது பெண்ணாக பிறந்த இவர் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக ஆணாக மாற சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.

இவர் தற்போது கர்ப்பமாக இருக்கிறார் என்பது தான் ஆச்சரியமளிக்கும் செய்தியாகும். இவர் கருத்தரிக்க பேஸ்புக் மூலம் பழக்கமான ஒரு நண்பரின் விந்து உதவியிருக்கிறது.

பிரித்தானியாவில் கர்ப்பமாக இருப்பதாக வெளியில் தைரியமாக சொன்ன முதல் ஆண் நபராக Hayden கருதப்படுகிறார்.

இது பற்றி Hayden கூறுகையில், தற்போது நான் நான்கு மாதம் கர்ப்பமாக உள்ளேன். முதலில் இதை வெளியில் சொல்ல தயங்கினேன். ஆனால் தற்போது வெளியில் தைரியமாக சொல்லி விட்டேன்.

நான் திருமணம் செய்து கொள்ள போவதில்லை. எனக்கு குழந்தை பிறந்த பின்னர் அதற்காகவே வாழ்க்கையை செலவிடவுள்ளேன் என கூறியுள்ளார்.

ஏற்கனவே பிரித்தானியாவில் ஒரு ஆண் நபர் கடந்த 2012 ஆண்டு கருத்தரித்து குழந்தை பெற்றிருந்தாலும் அவர் யார் என்ற அடையாளம் தெரியவில்லை.

உலகளவில் கடந்த 2008ஆம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த Thomas என்ற ஆண், முதன் முதலில் தான் கர்ப்பமாக இருப்பதை வெளியுலகிற்கு அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

– See more at: http://www.manithan.com/news/20170110124180#sthash.TnJUletD.dpuf

SHARE