பிரித்தானியாவில் ஆறாத வடுக்களோடு 34ஆவது ஆண்டு கறுப்பு ஜூலை நினைவேந்தல்

182

வலிகளே வாழ்க்கையாய் போன தமிழ் இனத்திற்கு வழி தேடியும், கறுப்பு ஜூலையில் உக்கிரத்தை உலகறிய செய்யவும், சமகால அரசியல் நிலையை சர்வதேசத்திற்கு தெளிவுபடுத்தும் முகமாகவும் பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர் தமிழ் மக்களால் 34ஆவது கறுப்பு ஜூலை நினைவேந்தல் நிகழ்வுமுன்னெடுக்கப்பட்டது.

குறித்த நினைவேந்தல் நிகழ்வு பிரித்தானிய மண்ணில் No – 10, Downing street முன்றலில் நேற்று முன்னெடுக்கப்பட்டது.

இதில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

“1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழர்களின் வலி சுமந்த மாதம்.

சிங்களவர்களின் திட்டத்தின் படி கொழும்பிலும், நாட்டின் தென் பகுதிகளிலும் வாழ்ந்த தமிழர்களின் உயிர், உடமைகள் அனைத்தையும் பறித்து சொந்த நாட்டிலே தமிழர்களை அகதிகளாக்கிய காலமாகும்.

பெண்கள், குழந்தைகள் என்று பாராது அனைவரையும் கொன்று குவித்து தமிழ் இனத்தை அழித்த காலம்.

இன்றுடன் 34 ஆண்டுகள் கடந்தாலும் இந்த இனவாதம் இப்பொழுதும் தொடர்ந்து நடந்தேறிக்கொண்டுதான் இருக்கின்றது. உண்மைகள் மிகவேகமாக மறைக்கப்பட்டு கொண்டிருக்கின்றன.” என குறிப்பிட்டுள்ளனர்.

 

SHARE