பிரித்தானியாவில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் கடந்த ஞாயிறு (28.08.2016) அன்று மதியம் 12 மணியிலிருந்து 4 மணிவரை பிரித்தானிய பிரதமர் அலுவலகம் அமைந்திருக்கும் No10, Downing Streetஇல் நடைபெற்றது. அதில்,
☆ புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட 105 போராளிகளது சந்தேகத்திற்கு இடமான மரணங்கள் குறித்து நம்பகத்தன்மையுடன் சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும்.
☆ ஏழு ஆண்டுகள் கடந்தும் காணாமல் போனோர் பற்றிய ஆரோக்கியமான நம்பகத்தன்மையுடைய விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும்.
☆ கைதுகள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், நில அபகரிப்பு, தமிழ் பிரதேசங்கள் சிங்கள மயமாக்கப்படல் இவை அனைத்தும் உடனே நிறுத்தப்படவேண்டும்.
ஆகிய அம்சக்கோரிக்கைகள் முன் வைக்கபட்டது. இலங்கை அரசிற்கு எதிரான
இந்த போராட்டத்தில் கடும் மழைக்கு மத்தியிலும் பெருமளவு தமிழ் உணர்வாளர்களும் நாடுகடந்த அரசாங்கத்தின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.