பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்….! நடக்க போவது என்ன…?

261

பிரித்தானியா தொடர்ந்தும் ஐரோப்பிய ஒன்றியத்தில் நிலைத்திருக்க வேண்டும் என அங்குள்ள பலரும் விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து கடந்த 10ஆம் திகதி The Hartlepool Mail மற்றும் Sunderland Echo ஆகிய ஊடகங்கள் மேற்கொண்ட ஆய்வுகளின் முடிவுகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் கடந்த 43 ஆண்டுகளாக இணைந்து இருந்து செயற்பட்டு வந்த நிலையில், பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதா, வேண்டாமா என்பது குறித்து வாக்கெடுப்பு நடைபெற்றது.

இந்த வாக்கெடுப்பில், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கு ஆதரவாக 52 சதவீத மக்கள் வாக்களித்தனர். இதையடுத்து பிரித்தானிய ஐரோப்பிய ஒன்றித்தில் இருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை தொடங்கியது.

எனினும், வாக்கெடுப்பின் போது வெளியேற வேண்டும் என வாக்களித்தவர்களில் 60 சதவீதமானவர்கள் தற்போது பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருப்பதையே விரும்புவதாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளதாக கூறப்படுகின்றது.

SHARE