பிரித்தானியாவில் குடியேறுபவர்களின் வேலையின்மை

190

பிரித்தானியாவில் வேலையில்லாமல் இருக்கும் 5 பேரில் ஒருவர் வேறு நாட்டிலிருந்து அங்கு குடியேறியவர் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

பிரித்தானியாவில் வசிப்பவர்களின் வேலையின்மை குறித்த ஆய்வு சமீபத்தில் நடத்தப்பட்டது.

இதில், பல்வேறு நாட்டிலிருந்து பிரித்தானியாவில் குடியேறிய 317,000 பேர் வேலையில்லாமல் இருப்பது தெரியவந்துள்ளது.

இதில் 98000 பேர் ஐரோப்பிய யூனியன் நாடுகளை சேர்ந்தவர்கள், 219,000 பேர் அதை சேராதவர்கள் ஆவார்கள்.

சதவீத அடிப்படையில் பார்த்தால் 4 சதவீத ஐரோப்பிய யூனியன் குடியேறிகளும், ஆறு சதவீத ஐரோப்பிய யூனியன் அல்லாத குடியேறிகளும் அடக்கமாகும்.

பிரித்தானியா Brexit முடிவை எடுத்திருந்தாலும், ஐரோப்பிய யூனியனை சேர்ந்த பல்கேரியா மற்றும் ரோமன் மக்கள் 362,000 பேர் கடந்தாண்டு பிரித்தானியாவில் வேலையில் உள்ளனர்.

அதாவது, பிரித்தானியாவில் வாழும் பல்வேறு ஐரோப்பிய யூனியன் நாடுகளை சேர்ந்த மக்களில் 6ல் ஒருவர் ரோமானியாவை சேர்ந்தவராகவோ அல்லது பல்கேரியாவை சேர்ந்தவர்களாகவோ இருக்கிறார்கள்.

மொத்தமாக பிரித்தானியாவில் வேலையின்மை பிரச்சினை 4.4 சதவீதமாக உள்ளது. கடந்த 1975லிருந்து இது மிக குறைந்த சதவீதமாகும்.

இது குறித்து வேலைவாய்ப்பு துறை அமைச்சர் Damian Hinds கூறுகையில், பிரித்தானியாவில் முதலீட்டாளர்கள் செய்யும் அதிக முதலீட்டால் பொருளாதாரம் உயர்ந்துள்ளது.

இதன் காரணமாக வேலைவாய்ப்புகள் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருவதாக கூறியுள்ளார்.

SHARE