பிரித்தானியாவில் நடைபெற்ற 17வது சைவ மாநாடு

319

பிரித்தானியாவில் இடம் பெற்ற “சைவதிருக்கோவில் ஓன்றியத்தின் 17 வது சைவமாநாடு” மிக சிறப்பாக கடந்த 30-04-2016 சனிக்கிழமையும் 01-05-2016 ஞாயிற்றுக்கிழமையும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் மத்தியில் நடைபெற்றது.

சைவத்தமிழ் பாரம்பரிய முறையில் ஓன்றியத்தின் தலைவர் மு.கோபாலகிருஸ்ணன் தலைமையில் பிரதம விருந்தினராக தவத்திரு மருதசலா அடிகளார் பேரூர் ஆதினம் சுவாமிகளும், கலைமாமணி உன்னிகிருஸ்ணன், கலைமாமணி திருமதி தேசமங்கையரசி, கலாநிதி சிறிகணேஸ். யாழ்மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மற்றும் லண்டன் கலைஞர்கள், பேச்சாளர்கள், சிவாச்சாரியார்கள், இளைஞர்கள் கலந்து பல சொற்பொழிவுகள், நடனம், சமயகருத்தரங்கு, நாடகம், இசைக்கச்சேரி மற்றும் பல நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்நிகழ்ச்சிகளை ஸ்தாபகர் சர்வதேச இந்து இளைஞர் பேரவை சி.கணேஸ்குமார் தொகுத்து வழங்கினார்.

SHARE