பிரித்தானியாவில் பற்றாக்குறையான வருமானத்துடன் மூன்றில் ஒரு பகுதியினர்

207

பிரித்தானிய மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினரே பற்றாக்குறையான வருமானத்துடன் வாழ்வதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஜோசப் அறக்கட்டளையின் ஆராய்ச்சி தகவல்களின் பிரகாரம் கடந்த 2014-2015 ஆம் ஆண்டில் 19 மில்லியன் மக்கள் குறைந்தபட்ச வருமான எல்லையை விடவும் குறைவான வருமானத்துடன் வாழ்ந்தனர் என்று கூறப்பட்டுள்ளது.

வீட்டு செலவுகள் அதிகரித்துவரும் அதேவேளை வருமானம் ஸ்தம்பிதம் அடைவதே இந்த பிரச்சனைகளுக்கு காரணம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பிரச்சினைகளை சமாளிப்பதாக பிரித்தானிய அரசு உறுதி அளித்திருந்தது.அதற்கேற்ப நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகின்றது.

லண்டன் நகருக்கு வெளியில் அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு இருக்கும் தனி நபர் ஒருவர் குறைந்தபட்ச வருமான எல்லையை அடைவதற்கு வருடத்திற்கு 17, 300 பவுண்ட்ஸ்கள் சம்பாதிக்க வேண்டும் என்று கூறப்படுகின்றது.

அதேவேளை இரண்டு குழந்தைகளுடன் தனி வீடுகளில் வசிக்கும் தாய் மற்றும் தந்தை இருவரும் தலா 18,900 பவுண்ட்ஸ்களை வருடம் ஒன்றிற்கு ஊதியமாக பெற வேண்டும். அவ்வாறு ஊதியம் பெறும் பட்சத்திலேயே குறைந்தபட்ச வருமான எல்லையை எட்டமுடியும்.

இவ்வாறு குறைந்தபட்ச வருமான எல்லையை அடையமுடியாமலிருக்கும் 19 மல்லியன் மக்களில் 6 மில்லியன் சிறுவர்கள் என்று கூறப்படுகின்றது. இந்த தொகையானது பிரித்தானியாவிலுள்ள சிறுவர்களில் 45 சதவீதத்தை குறிக்கின்றது.

அதேவேளை 1.8 மில்லியன் ஓய்வூதியம் பெறுவோர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

SHARE