பிரித்தானியாவில் பல மைல் தொலைவுக்கு மோசமான நிலையில் உள்ள சாலைகள்..!

132

 

போக்குவரத்துத்துறை நடத்திய ஆய்வொன்றில் பிரித்தானியாவில், வேல்ஸ் மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய இடங்களில் 22,990 மைல் தொலைவுக்கு சாலைகள் மோசமான நிலையில் உள்ளது தெரியவந்துள்ளது.

ஏற்கனவே மோசமான நிலையில் காணப்பட்ட சாலைகள் ‘Beast from the East’ என்னும் சைபீரியக் காற்றுகளுக்கு பின் இன்னும் மோசமான நிலைக்குச் சென்று பயணம் செய்வோருக்கு மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தும் நிலைக்குள்ளாகியுள்ளன என்று நெடுஞ்சாலைத்துறையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

பிரித்தானியாவில் உள்ளூர் அதிகாரிகளால் பராமரிக்கப்படும் சாலைகளில் 10 சதவிகிதம் மோசமான நிலையில் உள்ளது. சமீபத்தில் தனது சைக்கிளில் பயணம் செய்த Keith Ralph (37), சாலையிலுள்ள பள்ளம் ஒன்றில் தடுமாறி விழுந்ததில் அவருக்கு தலையிலும் கைகால்களிலும் பலத்த காயம் ஏற்பட்டது

இங்கிலாந்தின் பெரிய சாலைகளில் 3%, சிறிய சாலைகளில் 5% மோசமான நிலையில் உள்ளன.

வேல்ஸில் 10 % சாலைகள் மோசமான நிலையில் உள்ளன. ஸ்காட்லாந்தில் 30% பிரதான சாலைகளும் 35% சிறிய சாலைகளும் மோசமான நிலையிலோ அல்லது மேலும் ஆய்வு செய்யவேண்டிய நிலையிலோ உள்ளன.

இதற்கிடையில் சாலைகளைப் பழுதுபார்ப்பதற்காக 23 பில்லியன் பவுண்டுகளை பிரித்தானிய அரசு ஒதுக்கியுள்ளதாக போக்குவரத்துத்துறை செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்

SHARE