10 பவுண்ட் பெறுமதியான புதிய நாணயத்தாளை பிரித்தானியா வங்கி அறிமுகம் செய்துள்ளது.
இந்நிலையில், எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் புதிய நாணயத்தாள் புழக்கத்திற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
19ம் நூற்றாண்டில் பிரித்தானியாவில் வாழ்ந்த நாவலாசிரியரான ஜேன் ஓஸ்டனின் 200வது நினைவு தினம் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது.
இந்நிலையில், ஜேன் ஓஸ்டனின் நினைவாக அவரின் உருவப்படம் பொறிக்கப்பட்ட பிளாஸ்ரிக்கினாலான புதிய பத்து பவுண்ட் நாணயத்தாள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.