பிரித்தானியாவில் சோதனைக்கு சென்ற இடத்தில் பொலிசார் ஒருவரை சுட்ட நிலையில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெர்மிங்காம் நகரில் உள்ளூர் நேரப்படி காலை 5 மணிக்கு பொலிசார் ஒரு வீட்டுக்கு சென்றுள்ளனர்.
துப்பாக்கிகளை அனுமதி இல்லாமல் அங்கிருப்பவர்கள் வைத்துள்ளார்கள் என்ற அடிப்படையில் சோதனை செய்யவே பொலிசார் சென்றார்கள்.
சென்ற இடத்தில் பொலிசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒருவர் காயமடைந்தார்.
அவர் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிருக்கு ஆபத்தில்லை என தெரியவந்துள்ளது.
அந்த வீட்டில் இருந்த துப்பாக்கியை கைப்பற்றிய பொலிசார் நான்கு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்களை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.