பிரித்தானியாவில் வசிக்கும் இந்தியர் சாதனை

195

இந்தியாவை சேர்ந்த மாணவர் பிரித்தானியாவில் 21 வயதில் மருத்துவ பட்டத்தை பெற்றுள்ள நிலையில், பிரித்தானியா வரலாற்றில் மிகவும் இளம் வயது மாணவராகக் கருதப்படுகிறார்.

பிரித்தானியாவில் வசிப்பவர் அர்பன் தோஷி (21) இவர் இந்தியாவை சேர்ந்தவர் ஆவார். பொறியாளரான அர்பனின் தந்தைக்கு அணுக்கரு இணைவுத் திட்டத்தில் பணியாற்ற வாய்ப்புக் கிடைத்த நிலையில் கடந்த 2009ல் இந்தியாவிலிருந்து பிரான்ஸில் குடும்பத்துடன் குடியேறியுள்ளார்.

தனது 16வது வயதில் பிரான்ஸின் இன்டர்நேஷனல் பேச்சுலரேட் (International Baccalaureate) தேர்வில் இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், கணிதவியல், இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் அர்பன் தேர்ச்சி பெற்றார்.

பின்னர், தனது 17வது வயதில் இளங்கலை தேர்வில் வெற்றி பெற்றார். அதன் பிறகு மருத்துவ படிப்பில் சேர அர்பன் விரும்பினார்.

இதையடுத்து பிரித்தானியாவில் உள்ள ஷெஃபீல்ட் பல்கலைக்கழகத்தில் அர்பன் மருத்துவ பட்டப்படிப்பில் சேர்ந்தார்.

அங்கு திறமையாக படித்த அவர் தற்போது தனது 21 வயது, 334 நாட்களில் மருத்துவ பட்டப்படிப்பை பெற்றுள்ளார்.

இதன் மூலம் இளம் வயதில் மருத்துவரான சாதனையை அர்பன் படைத்துள்ளார்.

இது குறித்து அர்பன் கூறுகையில், நான் எப்போதும் மருத்துவராகவே விரும்பினேன். இளம் வயது முதலே மனித உடல் எவ்வாறு இயங்குகிறது என அறிய ஆர்வமாக இருந்ததாக கூறியுள்ளார்.

பிற்காலத்தில் இதய அறுவை சிகிச்சை நிபுணத்துவம் பெறுவதே அர்பனின் கனவாக உள்ளது.

SHARE