பிரித்தானியாவில் பெரும்பாலான வரி செலுத்துவோருக்கு சொந்த வீட்டுக்கு மேலதிகமாக சொத்து வைத்துள்ளனர். இது அவர்களுக்கு அதிக வருவாய் ஈட்டித்தருவதாக உள்ளது.
இரண்டாவது சொத்தில் இருந்து வரும் வருவாய்க்கு வரி?
இரண்டாவது சொத்தில் இருந்து கிடைக்கும் வருவாய்க்கும் சொத்து வரி செலுத்த வேண்டும். பொதுவாக சொத்துவரி செலுத்தும் அதே காலத்தில் இதற்கும் செலுத்தலாம். மட்டுமின்றி பிரித்தானிய குடிமக்கள் அல்லாதவர்களுக்கு வருவாய் ஈட்டுபவர்களுக்கான சிறப்பு சட்டங்கள் பொருந்தும்.
வாடகை வருவாய் எப்படி கணக்கிடப்படுகிறது?
தொழில்முறையாக ஈட்டும் வருவாய் போலவே வாடகை வருவாயையும் பொதுவாக கணக்கிடப்படுகிறது.
வாடகையில் ஏற்படும் இழப்பு எப்படி எடுத்துக்கொள்ளப்படும்?
எதிர்காலத்தில் கிடைக்கப்பெறும் வாடகை வருவாயை கருத்தில் கொண்டு தற்போதுள்ள வாடகை இழப்பு சமன் செய்யப்படும். அல்லது நடப்பாண்டில் கிடைக்கப்பெறும் மொத்த வருவாய் அல்லது விவசாயத்திற்காக ஒதுக்கப்படும் செலவினம்.
உள்கட்டமைப்புக்கு என்ன வரி நிவாரணம் கோரலாம்?
குடியிருப்பு போன்ற சொத்துக்களில் உள்கட்டமைப்புக்கு மூலதன சலுகைகளை கோர முடியாது. இருப்பினும் சில சலுகைகள் அனுமதிக்கப்படுவதுண்டு. மொத்த வாடகையில் 10% என இச்சலுகை கணக்கிடப்படுகிறது.
சொத்துக்கடன்கள் மீது செலுத்தப்பட்டுள்ள வட்டிக்கு வரி நிவாரணம் கோரலாமா?
கோரலாம். சொத்து வாங்குவதற்காக செலுத்தப்படும் வட்டிக்கு வரி நிவாரணம் கோரலாம்.
சொத்துக்கான மொத்த செலவினத்தில் வரி நிவாரணம் உள்ளதா?
குடியிருப்பின் மொத்த செலவினமே மூலதனம். மூலதனத்தில் ஏதேனும் ஒரு பகுதி சேதமடைந்தால் அதற்கு நிகரான பொருட்களை பயன்படுத்தியிருந்தால் வரி நிவாரணம் கோரலாம். ஆனால் அதிக விலை கொண்ட பொருட்களை பயன்படுத்தியிருந்தால் வரி விலக்கு நிராகரிக்கப்படும்.
சொத்து விற்கப்பட்டால் என்னவாகும்?
ஏதேனும் ஆதாயம் கிடைக்கும் நோக்கில் குடியிருப்பை விற்றிருந்தால் அதற்கு மூலதன ஆதாயத்திற்கான வரி விதிக்கப்படும். இது நடப்பாண்டில் மொத்த ஆதாயத்தினை கருத்தில் கொண்டு விதிக்கப்படும்.
வரி செலுத்தாமல் இருக்க?
திருமணமான ஜோடிகள் தங்களது சொத்துக்களை இணைந்து வாடகைக்கு விடலாம். அவர்களது சொத்து விற்கப்பட்டால், அவர்களுக்கு மொத்த முதலீட்டில் இருந்து கிடைக்கும் ஆதாயத்திற்கான வரியில் இருந்து விலக்கு பெறலாம்.
இரண்டாவது சொத்து விடுமுறை இல்லமெனில்?
விடுமுறை இல்லமெனில் அதற்கு சிறப்பு சலுகைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும் இதுகுறித்து நிபுணர்களுடன் கலந்தாலோசிப்பது சிறப்பு.
குத்தகைக்கு எடுக்கப்படும் சொத்துக்கள் மீதான வரி?
குத்தகைக்கு எடுக்கப்பட்ட குறிப்பிட்ட சொத்து 50 ஆண்டுகளுக்கு குறைவாக இருந்தால், செலுத்தப்படும் குறைவான தொகை வாடகை வருவாயாக கருதப்படும். மீதமுள்ளவை முதலீட்டு ஆதாயம் என கருத்தில் கொள்ளப்படும்.