பிரித்தானியாவில் 65 ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்திய எலிசபெத் மகாராணி: வெளியாகிறது நாணயம்

189
 

பிரித்தானியா மகாராணியாக இருந்து வரும் எலிசபெத் அவர்கள் வருகிற பிப்ரவரி 5 ஆம் திகதியோடு வெற்றிகரமாக தனது 65 வது வருடத்தில் அடியெடுத்து வைக்கிறார்.

பிரித்தானிய அரச குடும்பத்தில் நீண்ட ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்திய மகாராணி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருடைய தந்தை George VI 1952 ஆம் ஆண்டு பிப்ரவரி 6 ஆம் திகதி தூக்கத்தில் இருந்தபோது உயிர் துறந்தார்.

அப்போது, எலிசபெத் அவர்களின் வயது 25. தனது வாழ்நாள் குறுகிய காலமோ அல்லது நீண்ட காலமோ என்று எனக்கு தெரியாது.

ஆனால் எனது வாழ்நாள் முழுவதையும் சேவை செய்வதற்காக அர்ப்பணிக்கிறேன் என் அவர் அன்று உதிர்த்த வார்த்தைகள் இன்று மெய்யாகிவிட்டது.

ஆம், பிரித்தானிய அரச குடும்பத்தில் 1952 ஆம் ஆண்டில் மகாராணியாக முடிசூட்டப்பட்ட இவர், பிப்ரவரி 6 ஆம் திகதியுடன் 65 ஆண்டில் அடியெடுத்துவைத்துள்ளார்.

நீண்ட காலம் ஆதிக்கம் செலுத்தி இவருக்கு மரியாதை செலுத்தும்விதமாகSAPPHIRE Jubilee விழா கொண்டாடப்படுகிறது.

இதற்காக, பிரத்யேகமான முறையில் £50,000 செலவில் நாணயம் ஒன்று அச்சிடப்பட்டு வெளியாகவுள்ளது.

அந்த நாணயத்தில், இவரது பதவிவகித்த ஆண்டுகள் மற்றும், 21 வயது பிறந்தநாளை கொண்டாடும் போது, , எனது வாழ்நாள் முழுவதையும் சேவை செய்வதற்காக அர்ப்பணிக்கிறேன் என்று எலிசபெத் அவர்கள் கூறிய வார்தைகள் அச்சிடப்பட்டுள்ளன.

SHARE