பிரித்தானியாவில் ATM-ல் பணம் எடுத்த பெண்ணிற்கு ஏற்பட்ட நிலை: தொழிலபதிபர் செய்த துணிகர செயல்

154

பிரித்தானியாவில் பணத்தை திருடிச் சென்ற திருடனை தொழிலதிபர் ஒருவர் தைரியமாக தடுத்து நிறுத்திய சம்பவம் அனைவர் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது.

பிரித்தானியாவின் Manchester பகுதியிலிருக்கும் ஏடிஎம்மில் பெண் ஒருவர் பணம் எடுத்து வெளியில் வந்துள்ளார். அப்போது திடீரென்று ஒருநபர் அந்த பெண்ணிடம் இருந்த பணத்தை திருடிக் கொண்டு ஓடியுள்ளார்.

இதைக் கண்ட அங்கிருந்த தொழிபதிபர் ஒருவர் உடனடியாக அவனை தாவி பிடித்து தடுத்து நிறுத்திக் கொண்டிருந்த போதே, அங்கிருந்த நபர்கள் பொலிசாருக்கு தகவல் கொடுத்ததால், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் அவனை கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தை பார்த்த நபர் கூறுகையில், நான் இந்த வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது, திடீரென்று ஒருவன் ஓடினான். அப்போது அவனை பின் தொடர்ந்து ஓடி வந்த சிலர் திருடன், பிடிங்க என்று கூறினார்கள்.

அந்த நேரத்தில் ஒருவர் அவனை தாவி பிடித்து கீழே விழவைத்தார். அதன் பின் அங்கு கூட்டம் கூடியது, இந்த சம்பவத்தை பார்த்த போது 1970-களில் வரும் சண்டைக்காட்சியை பார்ப்பது போலவே இருந்தது.

அதைத் தொடர்ந்து அங்கு வந்த பொலிசார் திருடனை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபருக்கு 43 வயது இருக்கும் எனவும், சரியாக உள்ளூர் நேரப்படி பிற்பகல் 01.30 மணிக்கு தங்களுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து விரைந்து வந்த போது அந்த நபரை கைது செய்தோம். ஏடிஎம்மில் பெண் ஒருவர் பணம் எடுத்து வெளியில் வரும் போது திருடிக் கொண்டு ஓடியுள்ளான்.

அப்போது ஒரு நபர் திருடனை பிடிக்க உதவியுள்ளார் என பொலிசார் கூறியுள்ளனர். கைது செய்யப்பட்ட நபரிடம் பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் திருடப்பட்ட பணத்தை பொலிசார் மீட்டு அந்த பெண்ணிடம் கொடுத்துவிட்டதாகவும், ஆனால் எவ்வளவு பணம் என்பது குறித்து தெரியவில்லை என உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது.

SHARE