கனடிய கூட்டமைப்பின் 150 வது ஆண்டு நிறைவை கௌரவிக்கும் வகையில் பிரித்தானியா ராணி லண்டனில் உள்ள கனடா இல்லத்திற்கு சென்றிருந்தார்.
இதன் போது கனடா கவர்னர் டேவிட் ஜான்ஸ்டன் பிரித்தானியா அரச நெறிமுறையை மீறி, சிவப்பு கம்பள வரவேற்பில் ராணி வழுக்காமல் இருக்க அவரை பின்புறத்தில் தொட்டுக்கொண்டு வந்தார்.
இந்த நிகழ்விற்கு பின் செய்தியாளரை சந்தித்த டேவிட் ஜான்ஸ்டன், சிவப்பு கம்பளம் மிகவும் வழவழப்பாக இருந்தது. அதில், ராணி வழுக்காமல் இருக்கவே அவரை தொட்டேன் என விளக்கமளித்தார்.
இதுகுறித்து பிரித்தானியா அரச குடும்பம் சார்பில் கூறப்பட்டதாவது, ராணி அல்லது ராயல் குடும்ப உறுப்பினரைச் சந்திப்பதைப் போன்று எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லை. ஆனால் பலர் பாரம்பரிய வடிவங்களைக் கடைப்பிடிக்க விரும்புகின்றனர் என தெரிவித்துள்ளனர்.
பொதுவாக பொதுமக்கள் ராணியைத் தொடுவதில்லை என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. எனினும், கனடா கவர்னர் டேவிட் ஜான்ஸ்டனின் செயலை பலர் பாராட்டி வருகின்றனர்.