நீங்கள் யுகேயிற்கு வெளியிலிருந்து உள்விவகார அமைச்சைத் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் ஆயின் நீங்கள் தொடர்பு கொள்ளும் இலக்கங்கள், நேரம் மற்றும் கட்டணங்களில் 01 யூன் 2017லிருந்து முக்கிய மாற்றங்கள் ஏற்படுகின்றன.
01 யூன் 2017ம் திகதியிலிருந்து அனைத்து விசாரணைகளும் புதிய வர்த்தகப் பங்காளியான Sitel UK எனும் கம்பனியால் கையாளப்படும் என உள்விவகார அமைச்சு அறிவித்துள்ளது.
30 மே 2017 அன்று உள்விவகார அமைச்சு வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ஏற்படும் முக்கிய மாற்றங்கள் ஆவன,
- அனைத்துத் தொலைபேசி இலக்கங்கள் மற்றும் தொடர்பு கொள்வதற்கான நேரங்களில் மாற்றம் ஏற்படுகின்றன.
- நீங்கள் உரையாடக்கூடிய மொழிகள் ஆங்கிலம் உள்ளடங்கலாக 8 ஆக குறைக்கப்படுகின்றது.
- UK Visas and Immigration- ஐ ஈமெயில் மூலம் தொடர்பு கொண்டால் நீங்கள் £5.48 பவுண்டுகள் செலுத்த வேண்டும்.
நீங்கள் Credit Card அல்லது Debit Card மூலம் உங்கள் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். நீங்கள் முதல் அனுப்பும் ஈமெயில் மற்றும் அதே விடயம் தொடர்பாக பின்னர் தொடர்ந்து அனுப்பப்படும் ஈமெயில்களுக்கும் சேர்த்தே இந்தக் கட்டணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உங்களிடம் Credit Card அல்லது Debit Card இல்லையென்றால், நீங்கள் நம்பிக்கையான முகவரையோ அல்லது உங்களை ஸ்பொன்சர் செய்பவரையோ தெரிவு செய்து, அவர்கள் மூலம் நீங்கள் கட்டணங்களை செலுத்தி உள்விவகார அமைச்சை தொடர்பு கொள்ளலாம்.
நீங்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டால் தற்பொழுது நடைமுறையில் உள்ள அதே முறை தொடர்ந்தும் இருக்கும். நீங்கள் செலுத்தும் கட்டணத் தொகையில் மாற்றம் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
நீங்கள் யுகேயிற்குள் இருந்து கொண்டு உள்விவகார அமைச்சின் UK Visas and Immigration ஐ தொடர்பு கொள்வதாயின் இந்த சேவையில் மாற்றம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலதிக தகவல்களுக்கு இந்த இணைப்பை அழுத்துவும்.
https://www.gov.uk/government/news/customer-enquiry-service-changes
தகவல் Jay Visva Solicitors,
மேலதிக தொடர்பு எண் ( 44) 020 8573 6673