பிரித்தானியா பேரழிவை நோக்கி நகர்கிறது – ஹேக் 

169

பிரித்தானியா பேரழிவை நோக்கி நகர்கிறது: ஹேக் எச்சரிக்கை

பிரெக்சிற்றின் மூலம் பிரித்தானியா பேரழிவை நோக்கி நகர்கிறது என கொன்சவேற்றிவ் கட்சியின் முன்னாள் தலைவர் வில்லியம் ஹேக் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிரித்தானிய நாளிதழ் ஒன்றுக்கு அவர் எழுதிய கட்டுரையிலேயே இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

பிரெக்சிற் மூலம் ஏற்படும் பேரழிவை தடுப்பதற்கு இடைக்கால உடன்படிக்கையொன்றை ஏற்படுத்துவதே ஒரே வழி.

இதேவேளை பிரெக்சிற்றானது, பிரித்தானியாவின் நவீன வரலாற்றில் மிகப்பெரிய பொருளாதார, இராஜதந்திர மற்றும் அரசியலமைப்பு குழப்பங்களை விளைவிப்பதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா நீடிக்க வேண்டும் என வலியுறுத்திவந்த வில்லியம் ஹேக் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியுறவுத்துறை செயலாளர் பதவியிலிருந்து விலகியதுடன், 2015ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE