பிரித்தானியா மீது 24 மணித்தியாலத்தில் பயங்கரவாத தாக்குதல் மேற்கொள்ளக் கூடிய அபாயம்!

174

பிரித்தானியாவில் பயங்கரவாத தாக்குதல் மேற்கொள்ளக்கூடிய அபாயம் உள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு சேவை எச்சரித்துள்ளது.

இது தொடர்பில் பிரித்தானிய பாதுகாப்பு சேவை விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.

அதில், பிரித்தானியாவிலுள்ள அணு உலை மற்றும் விமான் நிலையங்கள் மீது பயங்கரவாதிகள் இலக்கு வைத்துள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. அடுத்து வரும் 24 மணித்தியாலங்களில் இந்த தாக்குதல் மேற்கொள்ளக் கூடிய அபாயம் உள்ளது.

இதனையடுத்து குறித்த பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகப்படுத்தியுள்ளது மட்டுமின்றி கண்காணிப்பு நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியுள்ளனர்.

ஐ.எஸ் அமைப்பு அல்லது வேறு ஏதேனும் தீவிரவாத அமைப்புகள் மடிக்கணனி அல்லது மொபைல் வாயிலாக விமான நிலைய பாதுகாப்பு வளையத்தை கடந்து குறித்த தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபடுத்த வாய்ப்பு உள்ளதாக பாதுகாப்பு வல்லுநர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

மட்டுமின்றி வெளிநாட்டு உளவாளிகள் அல்லது ஹேக்கர் குழுவினர் பிரித்தானிய அணு உலை பாதுகாப்பு வளையத்தை தகர்த்து நாசகர வேலையில் ஈடுபடவும் வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

SHARE