ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேற 115 பில்லியன் டொலர்களை கொடுக்க வேண்டும் என பிரான்ஸ் பொருளாதார அமைச்சர் லீ மெயர் கூறியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலக முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், பிரான்ஸ் நாடளுமன்றத்தில் இது குறித்து பேசிய அந்நாட்டு பொருளாதார அமைச்சர் லீ மெயர், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேற வேண்டுமென்றால் முதலில் 115 பில்லியன் டொலர்களை செலுத்த வேண்டும்.
மேலும், இதை பேச்சுவார்த்தை துவங்கும் முன்னரே செலுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் பட்ஜெட்டுக்கு கொடுப்பதாக பிரித்தானியா ஒப்புக்கொண்டுள்ளபடி இதை செலுத்த வேண்டும்.
இப்பணத்தைப் பற்றி பேரம் எதையும் பேச முடியாது என கூறிய லீ, முன்னாள் இங்கிலாந்து பிரதமர் மார்க்கெரட் தாட்சர் கூறியது போல எங்களுக்கு எங்களது பணம் திரும்ப கிடைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.