பிரித்தானிய மகாராணியின் பிறந்த நாள் விருந்தில் அலட்சியமாக நடந்து கொண்ட இளவரசி!

308

பிரித்தானியா மகாராணி எலிசபெத் அவர்களின் 90வது பிறந்தநாள் விருந்து Windsor Castle அரச குடியிருப்பில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

மகாராணி அவர்களின் பிறந்தநாள் ஏப்ரல் 21 ஆம் திகதி என்றாலும், உற்றார் உறவினர்கள் கலந்துகொள்ள, கலைநிகழ்ச்சிகளோடு பிறந்தநாள் விருந்து அரசகுடியிருப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த விருந்தில் இராணுவத்தினரின் மரியாதை அணிவகுப்பு மற்றும் பாடகர்கள், நடன கலைஞர்கள், நடிகர் நடிகைகள் அனைவரும் கலந்துகொண்டு கலைநிகழ்ச்சிகளை நடத்தினர்.

கலைநிகழ்ச்சிகளை அரசகுடும்பத்தினர் அனைவரும் கண்டு ரசித்தனர், பிரித்தானிய மகாராணி அவர்களும் கைதட்டி கலைஞர்களுக்கு உற்சாகம் அளித்தார், குறிப்பாக 900 குதிரைகளை கொண்டு நடத்தப்பட்ட கலைநிகழ்ச்சி அவரை வெகுவாக கவர்ந்தது.

அரசகுடும்பத்தினர் அனைவரும் கலை நிகழ்ச்சியை உற்சாகமாக கவனித்துக்கொண்டிருக்கையில், மகாராணியின் பின்புறத்தில் அமர்ந்திருந்த அவரது பேத்தியும், இளவரசியுமான Beatrice கலைநிகழ்ச்சிகளை கண்டுகொள்ளாமல் கைப்பேசியை பயன்படுத்திக்கொண்டிருந்துள்ளார்.

கிட்டதட்ட நிகழ்ச்சிமுழுவதும் அவர் கைப்பேசியில் நேரத்தை செலவிட்டுள்ளார், அவரின் இந்த அநாகரீகமான செயல் தொடர்பான புகைப்படம் வெளியானத்தொடர்ந்து சமூகவலதளைவாசிகள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.

கலை நிகழ்ச்சிகள் சற்று சலிப்பாக இருந்திருந்தாலும், இளவரசி கைப்பேசியை பயன்படுத்தியது அவமரியாதையை ஏற்படுத்தியதாக உள்ளது,

தனது பாட்டியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் போது இப்படி கைப்பேசியை பயன்படுத்திகொண்டிருப்பது மிகவும் வெட்ககேடான ஒன்றாகும் என பல்வேறு நபர்களும் வெவ்வெறு கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

SHARE