பிரித்தானிய மகாராணியை விட அதிக கவனத்தை ஈர்த்த நபருக்கு நேர்ந்த கதி

151

பிரித்தானிய மகாராணி எலிசபெத் அவர்களின் குதிரை வண்டியின் பின்னால் பாதுகாவலராக இருந்தவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

21 வயதான Ollie Roberts என்பவர் பிரித்தானிய மகாராணியின் குதிரை வண்டி பாதுகாவலராக இருந்தவர். இவர் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் ஆவார். இதன் காரணத்தினாலேயே இவர் பிரித்தானிய மகாராணியுடன் இவர் செல்லும்போது இவர் மீது தனிக்கவனம் வந்தது.

ஊடகங்களில் இவர் குறித்த செய்திகள் அதிமாக வெளியாக ஆரம்பித்தன.

இந்நிலையில் இவர் பணியில் இருந்து பதவியிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக அரண்மனை வட்டாரரம் தெரிவித்தது. தன்னை பதவியிறக்கம் செய்த காரணத்தால் இவர் தனது பணியில் இருந்து விலகியுள்ளார்.

இவர் பிரித்தானிய மகாராணியுடன் செல்கையில், அவரைவிட அதிக கவனம் பெற்றதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

SHARE