பிரித்தானிய மகாராணி எலிசபெத் அவர்கள் இறந்தபின்னர் இளவரசி கேட் மிடில்டன் Wales- இன் இளவரசி என்ற பட்டம் வழங்கப்படவிருக்கிறது. பிரித்தானிய அரச குடும்பத்து உறுப்பினர்களுக்கு அவர்களது பெயர்களுக்கு முன்னால் ஒரு பெயர் வழங்கப்படும்.
இளவரசர் வில்லியமை திருமணம் செய்துகொண்ட பின்னர் கேட் மிடில்டனுக்கு Duchess of Cambridge- யின் இளவரசி என்ற பட்டம் வழங்கப்பட்டது.
பிரித்தானிய மகாராணி எலிசபெத் அவர்களின் இறப்பிற்கு பின்னர் Wales- இன் இளவரசராக இருக்கும் வில்லியம்மின் தந்தை சார்லஸ் பிரித்தானிய அரசராக பதவியேற்பார்.
அப்போது, Duchess of Cambridge யின் இளவரசியாக இருக்கும் கேட் மிடில்டன் Wales-இளவரசி என்ற பெயரை பெறுவார்.
இதற்கு முன்னர் இளவரசி டயானா Wales இளவரசி என அழைக்கப்பட்டார். அவர் சார்லஸை விட்டு பிரிந்தாலும் உயிருடன் இருந்தவரை அவ்வாறு தான் அழைக்கப்பட்டார்.
டயானாவுக்கு பின்னர் கமீலாவை, சார்லஸ் இரண்டாவது திருமணம் செய்துகொண்டாலும், இளவரசி என்ற பெயர் முறைப்படி அவருக்கு வழங்கப்படவில்லை.
ஆனால், கேட் மிடில்டன் Wales இன் இளவரசியாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார். தனது மாமியாருக்கு கிடைத்த கௌரவம் இவருக்கு கிடைக்கவிருக்கிறது.
மகாராணி எலிசபெத்துக்கு பின்னர் சார்லஸ் பதவியேற்பார், இவருக்கு பிறகு இளவரசர் வில்லியம் அரசராவார் என்பது குறிப்பிடத்தக்கது.