நத்தார் பண்டிகை அண்மித்துள்ள நிலையில் பிரித்தானியாவில் வான்பரப்பின் மேகத்தில் நத்தார் தாத்தாவின் உருவம் தோன்றிய அதிசயம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
அந்நாட்டின் Witham பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பகுதியில் வசித்து வரும் 63 வயதான Cheryl Holland பெண் ஒருவரே இதனை புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், வீட்டு சமயல் அறையில் இருந்த தான், ஜன்னலை திறந்த போது எதிர்பாராத விதமாக நான் கண்ட காட்சி என்னை மெய்சிலிர்க்க வைத்தது.
வான்பரப்பின் மேகத்தில் கிறிஸ்துமஸ் தாத்தா உருவம் தனக்கு தெரிந்தது. தலை, கண் மற்றும் தாடி முதற்கொண்டு அப்படியே கிறிஸ்துமஸ் தாத்தா போன்றே இருந்ததாக அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், அந்த காட்சியினை புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இதேவேளை, குறித்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.